​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலம்பியாவில் நீர்மூழ்கி கப்பலில் கடத்தப்படவிருந்த 3 டன் கொக்கைன் பறிமுதல்!

Published : May 13, 2023 6:38 AM

கொலம்பியாவில் நீர்மூழ்கி கப்பலில் கடத்தப்படவிருந்த 3 டன் கொக்கைன் பறிமுதல்!

May 13, 2023 6:38 AM

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடல் வழியாக கடத்த முயன்ற 3 ஆயிரம் கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கொலம்பிய பசிபிக் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடற்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மத்திய அமெரிக்காவை நோக்கிச் சென்ற நீர்மூழ்கி கப்பலை இடைமறித்து சோதனையிட்ட அதிகாரிகள், 103 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.