சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஏற்கனவே தங்கள் தொற்றுநோய் தொடர்பான நுழைவு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்ட நிலையில், அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் 95 விழுக்காடும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 விழுக்காடும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் மே 11 முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.