பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதியன்று வழக்கு ஒன்றிற்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் கானை துணை ராணுவத்தினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அல் காதர் அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவரது கைது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று ஆஜரான நிலையில், அல் காதிர் வழக்கில் இடைக்கால நிவாரணமாக 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.