பூமிக்கு மேல், 25 கிலோ மீட்டர் உயரத்தில் உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜெஃபால்டோ (Zephalto) என்ற அந்த நிறுவனம், அடுத்தாண்டு இறுதியில் ஹீலியம் பலூனுடன் இணைக்கப்பட்ட கேப்சியூலில் சுற்றுலா பயணிகளை வானில் அனுப்ப உள்ளது.
ஒன்றரை மணி நேரத்தில், 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த கேப்சியூல், பின் 3 மணி நேரம் வானிலேயே மிதந்துவிட்டு பூமிக்குத் திரும்பும்.
அதில் பயணிப்பவர்கள், ருசியான ஃபிரெஞ்ச் உணவுகளையும், மதுவையும் சுவைத்தபடி பூமியின் அழகை கண்டுகளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
6 பயணிகள் மற்றும் 2 விமானிகள் செல்லக்கூடிய அந்த கேப்சியூலில், ஒரு முறை பயணிக்க ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அப்படி இருந்தும் 2024ஆம் ஆண்டிற்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜெஃபால்டோ நிறுவனம் கூறியுள்ளது.