பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவிய ராக்கெட்டுகளை அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மூலமாக இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.
அப்போது காஸாவின் வான பகுதியில் பயங்கர சத்தத்துடன் ராக்கெட்டுகள் வெடித்து சிதறின.கடந்த 9ம் தேதியன்று பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 5 மூத்த தலைவர்கள் உள்பட 30 பேரை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்றதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
எகிப்து மத்தியஸ்தம் செய்து வரும் நிலையிலும் இரு தரப்பும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில், 80 பேர் காயமடைந்திருப்பதாகவும், 5 கட்டடங்கள், 300 குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.