​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீடு போல வடிவமைக்கப்பட்ட சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிர் தப்பினர்

Published : May 12, 2023 12:21 PM

வீடு போல வடிவமைக்கப்பட்ட சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிர் தப்பினர்

May 12, 2023 12:21 PM

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், மினி லாரியை முந்திச் செல்ல முயன்ற சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி டேஷ்கேமில் பதிவாகியுள்ளது.

கடந்த மே 5ம் தேதி, வீடு போல வடிவமைக்கப்பட்ட சுற்றுலா வாகனம் ஒன்று பென்டில்டன் புறநகர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த வாகனம் செண்டர் லேனைக் கடந்து, முன்னே சென்ற மினி லாரியை வலதுபுறமாக முந்திச் செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தின் காட்சிகள் மினி லாரியில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமில் பதிவாகியுள்ளது. இதில் சுற்றுலா வாகனத்தில் பயணித்த 5 பயணிகளும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,