​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தைவானில் தண்டவாளத்தில் விழுந்த கிரேன் மீது மெட்ரோ ரயில் மோதி விபத்து ஒருவர் பலி..!

Published : May 12, 2023 12:20 PM

தைவானில் தண்டவாளத்தில் விழுந்த கிரேன் மீது மெட்ரோ ரயில் மோதி விபத்து ஒருவர் பலி..!

May 12, 2023 12:20 PM

தைவானில் தண்டவாளத்தில் விழுந்த கிரேன் மீது மெட்ரோ ரயில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு நகரமான தைச்சுங்கில் நிகழ்ந்த இந்த விபத்தில் ரயில் பெட்டியின் உட்புறம் பலத்த சேதமடைந்தது.

ரயிலில் பயணம் செய்தவர்களில் 10 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடைபெற்ற தைச்சுங் சிட்டி ஹால் மற்றும் ஜியுஷாங்லி வழித்தடங்களில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.