சுவிட்சர்லாந்து நாட்டின் Graubunden பகுதியில் உள்ள சிறிய மலை கிராமத்தில் விரைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதி இன்னும் சில வாரங்களில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் லாரிகள் மூலம் வெளியேறி செல்வதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் அப்பகுதியின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு அபாயம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன.