டிவிட்டர் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பில் இருந்து விலக எலான்மஸ்க் முடிவு செய்துள்ளார்.
தலைமை நிர்வாகி பதவிக்கு பெண் ஒருவரைத் தாம் தேர்வு செய்திருப்பதாகவும், ஆறு வாரங்களில் அவர் பொறுப்பு ஏற்க உள்ளதாகவும் ட்வீட் மூலமாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் யார் என்று பெயரை எலன் மஸ்க் குறிப்பிடவில்லை. Linda Yaccarino என்ற பெண்ணிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் தனிப்பட்ட மெசேஜ்களை பதிவர் மட்டும் பார்க்க முடியும் என்ற வசதியைத் தொடங்கி இருக்கிறது. முயற்சித்துப் பாருங்கள், ஆனால் நம்பி விடாதீர்கள் என்றும் மற்றொரு ட்வீட்டில் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். குரல் மற்றும் வீடியோ சாட் வசதிகளையும் டிவிட்டர் விரைவில் தொடங்க உள்ளது.