முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக 9ஆம் தேதியன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் கானை, நீதிமன்ற வளாகத்துக்குள் பாகிஸ்தான் துணை ராணுவப்படையினர் கைது செய்தனர்.
இதை கண்டிப்பதாகக் கூறி பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். தான் நீதிமன்றத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்டதாகவும், கம்புகளால் தாக்கப்பட்டதாகவும் இம்ரான் அப்போது தெரிவித்தார்.
அதற்கு, நீதிமன்ற வளாகத்தில் தனி நபரை எவ்வாறு கைது செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என தெரிவித்தனர்.
இதனிடையே, பதற்ற சூழல் காரணமாக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 3.3% சரிவடைந்து, டாலருக்கு நிகராக 300 ரூபாயாக வர்த்தகமாகிறது.