எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.
மும்பையில் சரத்பவாரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.
முன்னதாக, மகராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவையும் நிதிஷ் குமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் நாட்டை சரியான திசையில் வழிநடத்திச் செல்லலாம் என்று கூறினார்.