கனடாவில் இந்திய நிறுவனங்கள் 41 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக இந்திய தொழிற் கூட்டமைப்பு சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது.
ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய-கனடா வணிக கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் கனடா சர்வதேச வர்த்த அமைச்சர் மேரி நிங்கும் இணைந்து டொரன்டோவில் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், இந்தியர்களின் முதலீடு மூலம் கனடாவில் 17 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடாவில் முதலீடு செய்வதில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் உற்பத்தி மற்றும் மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு மூலம் இந்தியாவுக்கும் பலன் கிடைக்கும் என்று நம்புவதாக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.