பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலையில் நியுடோபுடாபு தீவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 210 கிலோ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோங்கா தீவுக்கு அருகிலிருக்கும் சமோவா தீவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் சேத விவரங்கள் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.