​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி கேரளா ஸ்டோரி ஒரு திரிக்கப்பட்ட கதை... தடை விதித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

Published : May 09, 2023 7:06 AM

தி கேரளா ஸ்டோரி ஒரு திரிக்கப்பட்ட கதை... தடை விதித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

May 09, 2023 7:06 AM

தி  கேரளா ஸ்டோரி ஒரு திரிக்கப்பட்ட கதை என்று கூறியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அப்படத்திற்கு தமது மாநிலத்தில் திரையிட தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், அமைதியைப் பேணவும், வெறுப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும் அந்தப் படத்திற்கு தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் தடை விதிப்புக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்த முதல் மாநிலமாக மேற்கு வங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.