​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமைச்சர் பொன்முடி கார் மோதி இளைஞர் காயம்.. தலையில் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Published : May 09, 2023 6:58 AM



அமைச்சர் பொன்முடி கார் மோதி இளைஞர் காயம்.. தலையில் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

May 09, 2023 6:58 AM

கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி கார் மோதி இளைஞர் ஒருவர் தலையில் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூரில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்முடி பின்னர் காரில் விழுப்புரம் புறப்பட்டு சென்றார்.

நெல்லிக்குப்பம் வழியாக சென்ற போது வரகால்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது அமைச்சர் கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.