உக்ரைனில் போரின் போக்கினை மாற்ற ரஷ்யா புதுவித ஆயுதங்களைக் கையாளுவது தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக உக்ரைனின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் ரஷ்யாவின் அதிநவீன 10 போர் விமானங்கள் புதிய வகை ஆயுதங்களை வீசியுள்ளன.
இவை கிளைட் எனப்படும் சறுக்குக் குண்டுகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இறக்கைகள் பொறுத்தப்பட்டு, ஜிபிஎஸ் எனப்படும் புவி நிலைநிறுத்தமானி உதவியுடன் இயங்குபவை கிளைட் குண்டுகள்.
ரேடார்களின் கண்காணிப்பிலும், வான் பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காகவும் தாழ்வாகவும், தூரமாகவும் பயணிக்கும் இந்த வகை குண்டுகளை தனது எல்லையில் உள்ள உக்ரைனிய நகரமான பெல்கொரோட் மீது ரஷ்யா வீசியது. இதனால் பாதிப்பு கடுமையாக இருந்தது தெரியவந்துள்ளது.