சீனாவின்கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிராந்தியத்தின் 43 கவுன்டிகளில் 67 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் 520 மில்லியன் யுவான் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளபெருக்கின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 14 ஆயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிராந்திய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.