மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தப்படும் என ராணுவ விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புதுறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலராக உயர்த்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.