மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கு நிகழ்ச்சியின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடாததாலும் 5 பேர் உயிரிழந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சித்திரை திருவிழாவில் பட்டாக் கத்தியுடன் இளைஞர்கள் நடனமாடிய காட்சிகள் வெளியானதாகவும், உளவுத்துறை செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சை, தருமபுரி தேர் திருவிழா, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி போன்றவற்றில் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், அது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.