சென்னை மெரினா கடற்கரை நடைபாதையில் போதையில் மயங்கி கிடந்த பெண்ணும், பசி மயக்கத்திலிருந்த 2 குழந்தைகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கண்ணகி சிலை அருகே 2 வயது பெண் குழந்தை மற்றும் 6 மாத ஆண்குழந்தை பசியுடன் அழுது கொண்டிருக்க அருகே பெண் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குழந்தைகளுக்கு பால் மற்றும் தண்ணீர் வாங்கிக் கொடுத்து பசியாற்றினர்.
பின்னர் அந்த பெண்ணையும் குழந்தைகளையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் போதையில் இருந்த பெண் அந்த குழந்தைகளின் தாய் என்பதும், ஆதரவற்ற அந்த பெண் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் மெரினாவில் தங்கி வந்துள்ளதாக கூறும் போலீசார், அவர்களை காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.