தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி வரும் 9ம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், ஈரோடு, நாமக்கல், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தியுள்ளது.