எல்லையில் அமைதி ஏற்படாத நிலையில், சீனாவுடனான உறவுகள் இயல்பு நிலையில் இருக்காது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு முடிவடைந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், எல்லைப் பகுதியில் அசாதாரண நிலை நீடிப்பதாகத் தெரிவித்தார்.
சீனாவுடனான உறவுகள் இயல்புநிலையில் இல்லை என்றும், எல்லையில் பிரச்சினைகள் தீராத வரை அது இயல்புக்கு வராது என்றும் தெளிவுபடுத்தினார்.
எல்லைப் பிரச்சினை குறித்து சீனாவுடன் வெளிப்படையான முறையில் விரிவாக விவாதித்து இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்