​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் அதிகாரிகளை காதல் வலையில் சிக்க வைத்த பச்சைக்கிளி..! 68 வயது ஆசையால் ஆப்பு..!

Published : May 06, 2023 6:20 AM



காவல் அதிகாரிகளை காதல் வலையில் சிக்க வைத்த பச்சைக்கிளி..! 68 வயது ஆசையால் ஆப்பு..!

May 06, 2023 6:20 AM

காவல் அதிகாரிகளிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலை விரித்து பணம் பறித்த கேடி லேடியை போலீசார் கைது செய்துள்ளனர். அழகை நம்பி வழிந்தவர்கள் வலையில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ஒரு காலத்தில் தமிழக காவல்துறையை கலங்க விட்ட சிவகாசி ஜெயலட்சுமி போல கேரள போலீசாரை முகநூல் மூலம் மிரள விட்டுள்ள அஸ்வதி என்கிற அச்சு , அனுஸ்ரீ என்கிற அனு இவர் தான்..!

பெயர்கள் மட்டும் தான் 4 .. இவரிடம் ஏமாந்தவர்கள் 10க்கும் மேல் என்கின்றனர் போலீசார். அழகான பெண்களின் படங்களுடன் போலியான முக நூல் கணக்குகளில் கேரள போலீசாரின் முக நூல் கணக்குகளை குறி வைத்து தனது காதல் ஆட்டத்தை துவங்கிய அனு, பலருடன் மெஜஞ்சரில் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

தன்னிடம் சிக்கும் போலீசாருக்கு முகநூல் வழியாக காதல் பாடம் நடத்தி, அவர்களிடம் இருந்து ஆன் லைன் மூலம் பணம் கறப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார் அனு. அந்தவகையில் கொல்லம் ரூரல் எஸ்.ஐ ஒருவர் இவரது அழகில் மயங்கி நைட் புல்லா கண்விழித்து சாட்டிங் செய்து ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பியதால், பணத்துடன் கம்பி நீட்டியதாக அனு மீது புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக அனு மீது புகைப்படத்தில் இருந்த பெண் அளித்த புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தனது புகைப்படத்திற்கு நைஸ் என்று கமெண்ட் செய்த 68 வயது முதியவரிடம் முகநூல் சாட்டிங் மூலம் திருமணம் செய்து கொள்வதாக நைசாக கூறி 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகின்றது. வயதுக்கு மீறிய ஆசையால் சேர்த்து வைத்திருந்த பணத்தை அனுவிடம் இழந்ததாக முதியவர் அளித்த புகாரிலும் அனு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரை சைபர் செல் போலீஸ் உதவியுடன் விசாரித்தனர். அவரது வங்கிக் கணக்கில் பயன் படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து அனுவை திருவனந்தபுரத்தில் சுற்றி வளைத்த போலீசார் , அவர் வாடகைக்கு தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முன்னாள் தேவசம் போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரனும், இந்தப்பெண்ணின் வலையில் சிக்கி ஏமாந்தது அம்பலமானது. தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ள கடகம் பள்ளி சுரேந்திரன் பெண் ஒருவருடன் மெய் மறந்து பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அந்தப்பெண் வேறு யாருமல்ல அனு தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் 5 வருடங்களாக முக நூலில் ஆண் வேட்டையாடும் அனு, முதல் முறையாக போலீசில் சிக்கி உள்ள நிலையில் காவல் துறையை சேர்ந்த 4 பேர் இவரிடம் பணத்தை பறிகொடுத்து இருப்பதாகவும், அவமானத்துக்கு பயந்து அனு மீது அவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது. ஐம்பதிலும் ஆசை வரலாம் தப்பில்லை .. வயதுக்கு மீறி ஏறுக்கு மாறாக முக நூலில் வலிந்தால் ஆப்பு வரும் என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி..!