உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்த வேண்டாம் என்றும், ரஷ்ய அதிபர் மாளிகை மீதான தாக்குதலுக்கு உக்ரைன் காரணமில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ் நகரில் பேசிய, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், போர் தீவிரமடைவதற்கு ட்ரோன் தாக்குதலை நியாயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ட்ரோன் தாக்குதல் தங்களை கவலையடையச் செய்துள்ளதாகவும் பொரெல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய அவர், உக்ரைனியர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாப்பதாகவும், தங்கள் மண்ணுக்காகப் போராடுவதாகவும் குறிப்பிட்ட பொரெல், ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்பில்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.