​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஐ.நா.பொதுச்செயலாளருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

Published : Apr 21, 2023 7:12 AM

சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஐ.நா.பொதுச்செயலாளருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

Apr 21, 2023 7:12 AM

நியுயார்க்கில் ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டாரசை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சூடான் விவகாரம், உக்ரைன்- ரஷ்யா போர் நிலவரம் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சூடானின் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த சந்திப்பு இருந்ததாக ஜெய்சங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

போர் நிறுத்தம் அல்லது இந்தியர்களை வெளியேற்றுவதற்கான சிறப்புப் பாதைகள் திறக்கப்படாத வரை இந்தியர்கள் சூடானை விட்டு வெளியே வருவது ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.