சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க தயார்நிலையில் உள்ளதாகவும், அங்கு சிக்கியுள்ளவர்களிடம் பல்வேறு வழிகளில் தொடர்புகொண்டு வருவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, சூடானில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்துவருவதாகவும் தெரிவித்தார்.
போர் நிறுத்தத்தை பொறுத்தும், இந்தியர்களை வெளியேற்ற பாதுகாப்பான இடங்களை பொறுத்தும் மீட்பு பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.
நியூயார்க்கில் உள்ள அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பொதுச்செயலாளரை சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.