​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Published : Apr 20, 2023 1:04 PM



சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Apr 20, 2023 1:04 PM

சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திவ்யாவும், அர்ணவும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் தன்னை கொடுமைபடுத்துவதாக திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, அர்ணவ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி வழக்குகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதி சந்திரசேகரன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.