​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுலின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் செசன்ஸ் நீதிமன்றம்..!

Published : Apr 20, 2023 12:28 PM



ராகுலின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் செசன்ஸ் நீதிமன்றம்..!

Apr 20, 2023 12:28 PM

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்த கருத்து குறித்து பாஜக எம்எல்ஏ பூர்னேஸ் மோடி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சூரத் கீழமை நீதிமன்றம், கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, 2 அல்லது அதற்கு அதிக ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் தானாக தகுதி இழப்பர் என்று 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், அதற்கடுத்த நாளே ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.