சென்னை பாரிமுனையில் விபத்துக்குள்ளான கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று முழுவதும் நீடித்து வந்த நிலையில், 14 மணி நேரத்திற்குப் பின் நள்ளிரவில் முழுமையாக அகற்றப்பட்டன.
அரக்கோணத்தில் இருந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத்துறையினர், மாநகராட்சிப் பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கட்டடக் கழிவுகளை அகற் 30 லாரிகள், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், ஏழு ஜேசிபி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.