​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிப்டோவை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் - இந்தியா வலியுறுத்தல்

Published : Apr 20, 2023 8:30 AM

கிரிப்டோவை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் - இந்தியா வலியுறுத்தல்

Apr 20, 2023 8:30 AM

நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து பங்குச் சந்தை தொடர்பான கலந்துரையாடலின் இரண்டாவது கூட்டத்தில் கிரிப்டோ கரன்சியின் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன.

இந்தியா தனது ஜி20 தலைமைப் பதவிக்கான முன்னுரிமைகளின் ஒரு பகுதியாக கிரிட்டோ-சொத்துகள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு உலகளாவிய கூட்டு அணுகுமுறையை வலியுறுத்தி வருகிறது.

நாடு கடந்து பணம் செலுத்தும் கிரிப்டோ முறைக்கு பரந்த ஒத்துழைப்பின் அவசியத்தை இந்திய மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் புதன்கிழமை விவாதித்தனர். .

நேற்றைய கலந்துரையாடலில் வங்கி முறைகள், பணம் செலுத்துதல் மற்றும் கிரிப்டோ-சொத்துகள், காப்பீடு மற்றும் மறுகாப்பீடு, மூலதனச் சந்தைகள், சொத்து மேலாண்மை மற்றும் நிலையான நிதி என்று ஆறு தலைப்புகளில் கவனம் செலுத்தியது