​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநருக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதிகளும் எந்த குறையும் இன்றி வழங்கப்படுகின்றன - நிதியமைச்சர்

Published : Apr 20, 2023 8:15 AM

ஆளுநருக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதிகளும் எந்த குறையும் இன்றி வழங்கப்படுகின்றன - நிதியமைச்சர்

Apr 20, 2023 8:15 AM

ஆளுநருக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிதிகளும் எந்த குறையும் இன்றி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற இதுதொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், ஆளுநரின் செலவினங்களுக்காக 17 கோப்புகள் கூடுதல் நிதி அல்லது செலவுக்கு உருவாக்கப்பட்டு நிதித்துறை ஒப்புதல் பெற்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2 கோடியே 10 லட்சம் ரூபாயில் புதிய வாகனம் வாங்கவும், குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, கிறிஸ்துமஸ், அமைச்சர் பதவியேற்பு, நீதிபதி பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

வேறு எந்த மாநிலங்களிலும் வழங்காத வகையில், தேவையான நிதியும், கூடுதல் சலுகையும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் கோப்பு உருவாக்காமல், நிதியமைச்சரிடம் கூறாமல், அரசு கொள்கை முடிவெடுக்காமல் தொகை வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.