எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவம், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்கள் ராணுவத்தளபதிகள் மாநாடு நடைபெறுகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும், ராணுவத்தின் போர் திறனை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அதில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், எல்லையில் பணிபுரியும் ஒவ்வொரு வீரருக்கும் சிறந்த ஆயுதங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்வதாக கூறினார்.
மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், டிரோன்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.