மீண்டும் பழங்கால பாரம்பரிய டிசைனில் முகூர்த்த புடைவைகள்.. இவ்வளவு விலையா..?
Published : Apr 19, 2023 3:39 PM
மீண்டும் பழங்கால பாரம்பரிய டிசைனில் முகூர்த்த புடைவைகள்.. இவ்வளவு விலையா..?
Apr 19, 2023 3:39 PM
பழங்கால ஆடை கலாச்சாரத்தை மீண்டும் சந்தையில் கொண்டு வரும் வகையில், பாரம்பரிய டிசைன்கள் கொண்ட புடவைகளை ஆர்.எம்.கே.வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேட்டியளித்த ஆர்.எம்.கே.வி நிறுவனத்தின் இயக்குநர் சங்கர் குமாரசாமி, கோடை காலத்தில் மக்களுக்கு பிடிக்கும் வகையில் பாரம்பரியமான முறையில் புடவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், 300 ஆண்டுகளுக்கு முன் ராணிகள், பெண்கள் அணிந்த ஆடைகள் குறித்து புத்தகங்களில் ஆய்வு செய்து, அதன் மூலம் 10 வகையான சேலைகளை வடிவமைத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் விலை 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை உள்ளதாகவும், மக்கள் வரவேற்பை பொறுத்து குறைந்த விலையில் பாரம்பரிய உடைகளை விற்க திட்டமிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.