இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை சந்தித்தார்.
மும்பையில் உள்ள பேட்மிண்டன் மைதானம் சென்ற அவர், பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவால், புல்லேலா கோபிசந்த் மற்றும் பாருபள்ளி காஷ்யப் ஆகியோருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியதுடன், அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் விளையாட்டு வீரர்களுக்கு ஆப்பிள் வாட்ச் எவ்வாறு உதவுகிறது என்பதையும் நேரடியாக கேட்டறிந்தார்.