​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளுவதாக சீன அதிபர் மீது அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றச்சாட்டு..!

Published : Apr 19, 2023 6:26 AM

உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளுவதாக சீன அதிபர் மீது அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றச்சாட்டு..!

Apr 19, 2023 6:26 AM

சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளுவதாக அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த மார்ச் 20ம் தேதி  சென்ற சீன அதிபர், மூன்று நாட்கள் தங்கி அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவாளியான புதினை கைது செய்ய  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்த  நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே சீன அதிபர் மாஸ்கோ சென்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து ராணுவ ஒத்துழைப்பு, ஆயுதபேரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யாவும் சீனாவும் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்க வான்வெளிக்கு உளவு பலூனை அனுப்பியதை சுட்டிக்காட்டி,  அமெரிக்காவுடன் சீனா பனிப்போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.