ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட ஐடி 7 என்ற பெயரில் இரு வேறு ரக மின்சார சொகுசு காரை வோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஆட்டோ ஷாங்காய் கண்காட்சியில் அந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
82 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்ட புரோ ரக கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 615 கிலோ மீட்டர் தூரமும், 91 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்ட புரோ எஸ் கார் 700 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ., நிசான் உள்ளிட்ட நிறுனவங்களுடன், சீன நிறுவனங்களாக பைட் ஆட்டோ, நியோ ஆகியவையும் கண்காட்சியில் தங்களது புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தின.