நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, காவல்நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமுதா ஐஏஎஸ் நடத்திய விசாரணையில் 14 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விசாரணை அலுவலகத்தில் அமுதாவை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கணினி அறை, சிசிடிவி கேமரா அமைவிடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து, பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய விகே புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.