அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானுக்கு சிறிதேனும் ஊறு விளைவித்தால் கூட, இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்நாட்டின் ராணுவ தின அணிவகுப்பில் உரையாற்றிய ரைஸி, ஈரான் அருகே முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்தார்.
ரமலான் மாதம் என்பதால் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டு, ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் அணிவகுப்பு மட்டும் நடைபெற்றது.
எதிரி நாட்டு விமானங்களையும், ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தும் பொருட்டு, ரஷ்யாவால் வழங்கப்பட்ட எஸ்-300 வான் பாதுகாப்பு அமைப்புகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.