தாய்லாந்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் யானைகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பண்டைய காலம் தொட்டு, தாய்லாந்து கலாச்சாரத்தில் யானைகள் முக்கிய பங்காற்றிவருவதால், ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதி அங்கு யானைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
சோன்புரி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோங் நூச் தாவரவியல் பூங்காவில், 26 அடி நீள மேஜையில், 3 டன் பழங்களும், காய்கறிகளும் படைக்கப்பட்டு, 60 யானைகளுக்கு பரிமாறப்பட்டன.