நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்றார்.
காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தற்காலிக தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ண கார்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 5 முறை அமைச்சராகவும், ஒரு முறை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.