அமெரிக்கா-தென்கொரியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கும் நிலையில், வடகொரியா ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, வடகொரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா-தென் கொரியா படையினர் இன்று முதல் 11 நாட்களுக்கு கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்கின்றனர். சுதந்திரக் கேடயம் 23 என அழைக்கப்படும் இப்பயிற்சி 2017-ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய கூட்டு ராணுவ போர் ஒத்திகையாகும்.