மெக்சிகோ எல்லை வழியாக வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற வெனிசுலாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மெக்சிகோ எல்லை நகரமான Ciudad Juarez வழியாக முள்வேலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற அவர்களை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தஞ்சம் கோரி வந்த புலம்பெயர்ந்த பெண்கள் தங்களை அனுமதிக்கக்கோரி அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
சில புலம்பெயர்ந்தவர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் மீது வீச முயன்றதால் பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி அவர்களை அதிகாரிகள் விரட்டியதாக கூறப்படுகிறது.