மும்பையை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றில், 24 மணி நேரத்தில் இதயம் உள்ளிட்ட 6 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 நன்கொடையாளர்கள் உட்பட 8 பேரிடம் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெற்றப்பட்டதாகவும், அதைவைத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
25 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 30 செவிலியர்கள் உள்ளிட்டோருடன் அறுவை சிகிச்சை உட்பட ஆறு சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.