​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் பரவி வரும் வைரஸ், 5 தொற்று நோய்களின் கலவை - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

Published : Mar 13, 2023 7:03 AM

கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் பரவி வரும் வைரஸ், 5 தொற்று நோய்களின் கலவை - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

Mar 13, 2023 7:03 AM

கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் பரவி வரும் வைரஸ், 5 தொற்று நோய்களின் கலவை என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லேசான முதல் அதி தீவிரமான உடல் நல பாதிப்புகளை இந்த வைரஸ் கலவை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் போல் அல்லாமல் மாறுபட்ட இருமல், சளி, காய்ச்சல் உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏராளமானோரிடம் கண்டுள்ள மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையளித்து வருகின்றனர்.பன்றிக் காய்ச்சல் போன்றவையும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

2019 முதல் கோவிட், பன்றிக்காயச்சல், H3N2, விக்டோரியா, யமகட்டா ஆகிய 5 வகையான தொற்று நோய்கள் பரவி வருகின்றன. அவற்றின் கலவைதான் இப்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.