சென்னை சாலிகிராமத்தில் போட்டோ ஸ்டியோ உரிமையாளர் வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்காக சென்ற போலீசாரை தாக்கிய இருவரை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
குமரன் காலனியில் வசித்துவரும் சந்தோஷ்குமார், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நேரம் பா ர்த்து, வீட்டின் பூட்டை உடைத்து 66 சவரன் தங்கநகை, 80 கிலோ வெள்ளி பொருட்கள், 13 லட்சம் ரொக்கபணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
புகாரின்பேரில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடிவரும் நிலையில், சந்தேகத்தி ன்பேரில் ஆற்காடு ரோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டிற்கு பதிலாக பக்கத்தில் வசிக்கும் பொன்னுவேல் என்பவரது வீட்டு வளாகத்திற்குள், காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் காவலர் இலக்கியா சென்றுள்ளனர்.
மதுபோதையில் இருந்த பொன்னுவேல் காவலர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக சுகுமார் என்பவரும் தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கேகே நகர் போலீசார் பெண் போலீசார் இருவரையும் மீட்டனர்.