சென்னையில் ஹெல்மெட்டுடன் பொருத்தும் கேமராவின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், விதிமுறைகளை மீறி அதனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று பைக் ரேஸ், வீலிங் போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள், அதனை ஊக்கப்படுத்தும்விதமாக ஹெல்மெட் உடன் பொருத்தப்பட்ட 360 டிகிரி கேமராவின் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை, குறிப்பிட்ட சில பைக்கர்ஸ் அறக்கட்டளைகளுக்கு மட்டுமே ஹெல்மெட்டுடன் கேமரா பொருத்தி சுற்றுலா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முறையான அனுமதியின்றி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.