H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் கேரம் விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்த பின் பேசிய அவர், நேற்று முன் தினம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம் மூலம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.