தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தநிலையில், 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
2 பேரை போலீசார் கைது செய்தநிலையில், முக்கிய குற்றவாளியான ஜெயபிரகாஷ் தட்டப்பாறை காட்டுப்பகுதியில் இருப்பதாக கிடைந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜெயப்பிரகாஷை பிடிக்க முயன்றனர்.
போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது துப்பாக்கியால் காலில் சுட்டு ஜெயப்பிரகாஷை பிடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசாரை நேரில் சந்தித்து காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.
இந்த கொலை வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவனை போலீசார் கூட்டாம் புளி பகுதியில் பிடிக்க சென்றபோது தப்பி ஓடிய போது பாலத்தில் இருந்து விழுந்து கை முறிந்தது குறிப்பிடத்தக்கது.