பிரான்ஸில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-லிருந்து 64-ஆக உயர்த்தும் சட்டமசோதாவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் இமானுவேல் மேக்ரனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தால் பிரான்சில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தலைநகர் பாரீஸில் நடைபெற்ற 7வது நாள் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர், இளைஞர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முகமூடி அணிந்து பட்டாசுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடிக்க முயன்றனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடங்கள் போர்க்களமாகக் காட்சியளித்தன.