பெங்களூரு-மைசூரு இடையே 8 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள Expressway சாலையை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள NH-275 எனப்படும் அந்த சாலையில் 4 ரயில்வே மேம்பாலங்கள், 9 பாலங்கள், 40 சிறிய பாலங்கள், 89 சுரங்க பாதைகள் உள்ளன.
அந்த சாலையின் மூலம் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும்.
கர்நாடகாவில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, புதிய Expressway சாலையை திறந்து வைப்பதன் மூலம், அப்பிராந்தியத்தில் சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.